சிரியாவில் நிரந்தர யுத்த நிறுத்தம்?

Syria

2011 ஆம் ஆண்டில் இருந்து அண்மை காலம்வரை சிரியாவில் சண்டையிட்டு வந்த சிரிய அரசும், பல ஆயுத குழுக்களும் தற்போது நாடளாவிய யுத்த நிறுத்தத்துக்கு இணங்கி உள்ளன. நாடளாவிய யுத்த நிறுத்தம், உள்ளூர் நேரப்படி, இன்று வியாழன் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டு உள்ளது.
.
இங்கு முக்கிய விடயம் என்னவென்றால் அமெரிக்காவின் எந்தவித பங்கும் இன்றியே இந்த யுத்த நிறுத்த இணக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, சவுதி உட்பட பல நாடுகள் துருக்கியின் உதவியுடன் சிரியாவில் யுத்தத்தை ஆரம்பித்து இருந்தன. ஆனால் சிரியாவின் அரசுக்கு ரஷ்யாவும், ஈரானும், லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கமும் உதவ முன்வர, சிரியாவின் போராளிகள் பெரும் தோல்விகளை சந்தித்தனர். இறுதியில் போராளிகள் Aleppo நகரையும் பறிகொடுத்தனர்.
.
அதேவேளை துருக்கியின் ஜனாதிபதிக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலும் முறுகல் நிலை உருவானது. துருக்கியில் தனது ஆட்சியை அமெரிக்கா இராணுவ கவிழ்ப்பின் மூலம் அழிக்க முனைத்ததாக துருக்கியின் ஜனாதிபதி கருதினார். அதனை தொடர்ந்து துருக்கிக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் நடப்பு வளர்ந்தது. அந்த உறவு இன்றைய யுத்த நிறுத்தத்துக்கு வழி சமைத்தது.
.
இன்றைய யுத்த நிறுத்தம் ரஷ்யா, துருக்கி, சிரியா, ஈரான் ஆகிய நாடுகளின் செயல்பாடே. இவர்கள் அடுத்த மாதம் Kazakhstan நாட்டில் நிரந்தர தீர்வுக்கான பேச்சுவார்த்தை ஒன்றிலிம் ஈடுபாடுவர். அங்கும் அமெரிக்கா அழைக்கப்படமாட்டாது என்று கூறப்பட்டு உள்ளது.
.
அமெரிக்காவில் இடம்பெறும் ஜனாதிபதி மாற்றமும், ஒபாமாவுக்கு, டிரம்புக்கும் இடையிலான முரண்பட கருத்துக்களும் கூடவே அமெரிக்காவின் ஆளுமையை சிரியா விடயத்தில் பின்தள்ளி உள்ளது.
.

இந்த யுத்த நிறுத்த நிறுத்தத்தில் IS போன்ற குழுக்களுக்கு இடம்பெறா. அவை மீது சிரிய, ரஷ்ய இராணுவம் தொடர்ந்தும் தாக்குதல் நடாத்தும்,
.