அமெரிக்கா வெளியிடும் அர்ஜென்ரீனா உண்மைகள்

Argentina

இன்று வெள்ளி அமெரிக்கா தன்வசம் இருந்த ஆர்ஜென்ரீனா யுத்த காலத்து உண்மைகள் பலவற்றை வெளியீடு உள்ளது. Cold War காலத்தில் ஆர்ஜென்ரீனாவில் ஒரு சர்வாதிகார அரசை அமைத்து அதற்கு ஆதரவு வழங்கி வந்திருந்தது அமெரிக்கா. அக்காலங்களில் அந்த சர்வாதிகார அரசு செய்த கொடுமைகளை அமெரிக்கா ஆவணப்படுத்தி வைத்திருந்தாலும் தற்போதே அவைகளை வெளியிடுகின்றது.
.
1975 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற, Dirty War என அழைக்கப்படும் இந்த யுத்தம் தொடர்பான 500 ஆர்வங்களை இன்று வெளியிட்டு உள்ளது (declassified). மேலும் ஆவணங்கள் வெளியிடப்படும் என்றும் கூறப்படு உள்ளது.
.
சர்வாதிகார அரசு படுகொலைகள், அட்டூழியங்கள் செய்தபோதும் அமெரிக்க மறைவில் அந்த சர்வாதிகார அரசுக்கு ஆதரவு வழங்கி உள்ளது என்பதை Martin Edwin Anderson என்பவர் தனது Washington Post கட்டுரை ஒன்றில் 1987 இல் தெரிவித்து இருந்தார்.
.
1976 ஆம் ஆண்டின் முன்பகுதியில் அமெரிக்கா $50 மில்லியன் உதவியையும், பின்பகுதியில் மேலும் $63.5 மில்லியனும் சவாதிகார அரசுக்கு அமெரிக்காவால் நன்கொடை செய்யப்பட்டு இருந்தது. 1978 ஆம் ஆண்டில் $120 மில்லியன் பெறுமதியான ஆயுத தளபாடங்கள் அமெரிக்காவால் இந்த சர்வாதிகார அரசுக்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது.
.

CIA அறிந்திருந்த தகவல்படி இந்த சர்வாதிகார அரசு சிலரின் பாதங்களை குளிர் நீரில் உறைய வந்து பின் உடனடியா கொதி நீரில் அமிழ்த்தி துன்புறுத்துவாராம்.
.