சீனா அணுக்குண்டு விமான வலம்

Xian-H6

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இருந்த டொனால் ட்ரம்பின் செயல்பாடுகளுக்கு பதிலடியாக சீனா தனது அணுக்குண்டு விமானம் ஒன்றை தென்சீன கடல் பகுதியில் பறக்க விட்டுள்ளது. முன் எப்போதும் பறக்காத அளவு தூரத்துக்கு இம்முறை இந்த விமானம் பறந்துள்ளது.
.
1972 ஆம் ஆண்டு முதல், ‘ஒரு சீனா’ என்ற கொள்கையின்கீழ், பெய்ஜிங் தலைமையிலான சீனாவையே நாடாக கொண்டு, அதேவேளை தாய்வானுடன் மேலதிக உறவையும் பேணி வந்துள்ளது. 1972 முதல் அமெரிக்கா தாய்வானை ஒரு நாடாக கருதி செயல்படவில்லை.
.
ஆனால் ட்ரம்ப், தனது தேர்தல் வெற்றிக்கு பின், தாய்வான் ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்பை ஏற்றுக்கொண்டு பேசியுள்ளார். அதை தொடர்ந்து கடந்த கிழமை அமெரிக்காவின் ‘ஒரு சீனா’ என்ற கொள்கையையும் குறை கூறியிருந்தார். இந்த செயல்பாடுகளில் பின்னரே சீனா தனது விமானத்தை தென் சீன கடல் எங்கும் பறக்க விட்டுள்ளது. Xian H6 என்ற இந்த விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் ஆகும்.
.

அதவேளை சீனா பெருமளவு நிலத்தில் இருந்து வானத்துக்கான  ஏவுகணைகளை தென்சீன பகுதிகளுக்கு நகர்த்தி உள்ளதாக அமெரிக்க செய்மதி தகவல்கள் கூறுகின்றன.  சீனாவின் SA-21 மற்றும் HQ-9 வகை ஏவுகணைகளே இவ்வாறு நகர்த்தப்பட்டு உள்ளன.
.
அடுத்த வருட ஆரம்பம் முதல், பெரும் யுத்தங்களை சந்திக்காவிடினும், சர்வதேச அளவிலான பெரும் அரசியல் குழப்பங்களை உலகம் சந்திக்க நேரிடும்.
.