வெட்டுக்கிளி உண்டார் Prof. Sam Wong PhD

SamWang
.

மூன்றாம் உலகநாட்டு சாதாரண மக்கள், குறிப்பாக ஆண்கள், தேர்தல் காலங்களில் அனாவசியமான பந்தயங்களில் ஈடுபட்டு, பின்னர் தோல்வி காரணமாக தலைக்கு மொட்டை அடைத்தல், பாதி மீசையை சவரம் செய்தல் போன்ற காரியங்களை செய்வது உண்டு. ஆனால் அவ்வகை போட்டி ஒன்றில் அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஈடுபட்டு, பின் தோல்வியுற்று, அதன் காரணமாக வெட்டுக்கிளி ஒன்றை தொலைக்காட்சி ஒன்றின் முன்னிலையில் உண்று உள்ளார்.
.
அமெரிக்காவின் New Jersey மாநிலத்தில் உள்ள Princeton University பேராசிரியர் Sam Wang, PhD என்பவர் ஒரு கருத்துக்கணிப்பு வல்லுனரும் ஆவார். Princeton Election Consortium என்ற அமைப்பின் தாபகரான இவரை தொலைக்காட்சி நிலையங்களும், பத்திரிகைகளும் அழைத்து வல்லுனர் கருத்து கேட்பது உண்டு.
.
ஒக்டோபர் மாதத்தில் அவ்வாறான கருத்து தெரிவிப்பு ஒன்றின்போது Sam Wang அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 240 electoral college வாக்குகளுக்கு மேலாக அடைந்தால் “I will eat a bug” என்று கூறியிருந்தார். தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் 290 electoral college வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படு இருந்தார். (அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்து மில்லியன் கணக்கான வாக்குகளையும் electoral college என்ற வாக்குகளாக மாற்றி வெற்றியாளரை அறியப்படும். உதாரணமாக கலிபோர்னியாவில் வெல்பவருக்கு 55 electoral college வாக்குகள் கிடைக்கும். ஆனால Alaska போன்ற சிறிய மாநிலத்தில் வென்றவருக்கு 3 electoral college வாக்குகள் மட்டுமே கிடைக்கும்)
.
Sam Wang தனது கருத்தை எழுந்தமானமாக தெரிவித்து இருக்கவில்லை. பதிலாக நன்கு கணித்தே கூறியிருந்தார். ஆனால் அந்த கணிப்பு பொய்த்துவிட்டது. தனது தோல்வியை ஏற்றுக்கொண்ட Sam Wang அமெரிக்காவின் CNN என்ற தொலைக்காட்சியில் இடம்பெறும் Smerconish என்பவரின் நிகழ்ச்சி ஒன்றில் இன்று சனி வெட்டுக்கிளி ஒன்றை உண்டார்.
.