பாலஸ்தீனியரை கைவிட்டு இஸ்ரவேலை நெருங்கும் மோதி

IndiaIsrael

மிக நீண்ட காலமாக இந்தியா ஒரு பாலஸ்தீனியார் ஆதரவு நாடாகவே இருந்து வந்துள்ளது. பாலஸ்தீன் தனது சொந்த நாட்டை அடைவதை இந்தியா 1988 ஆம் ஆண்டிலேயே ஆதரித்து இருந்தது. இந்தியாவே PLOவை ஆதரித்த முதலாவது அரபு நாடு அல்லாத நாடு. ஆனால் அமெரிக்க ஆதரவுடன் இந்தியாவை வளர்க்க முனையும் இந்திய பிரதமர் மோதி காலத்தில் இந்திய-இஸ்ரவேல் உறவு பலமடைந்து வருகின்றது.
.
இந்த மாதம் 15 ஆம் திகதி இஸ்ரவேலின் ஜனாதிபதி Reuven Rivlin 6-நாள் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றில் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். அப்போது இவருடன் இஸ்ரவேலின் பல்கலைக்கழக உறுப்பினர் பலரும், வர்த்தகர்களும் செல்லவுள்ளனர். பதவியில் இருக்கும் இஸ்ரவேல் ஜனாதிபதி ஒருவர் இந்தியா செல்வது இம்முறை இரண்டாவது தடவையாக இருக்கும்.
.
அடுத்த வருடம் இந்திய பிரதமர் மோதி இஸ்ரவேல் செல்லக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அப்படி மோதி செல்வாராயின் அதுவே பதவியில் இருக்கும் இந்திய பிரதமர் ஒருவரின் இஸ்ரவேலுக்கான முதல் பயணமாக இருக்கும்.
.
கடந்த வருடம், மோதி ஆட்சிக்காலத்தில், இந்திய ஜனாதிபதி Pranab Mhkherjee இஸ்ரவேல் சென்றிருந்தார்.
.

பாலஸ்தீனியரின் மசூதியான Al-Aqsa மசூதியின் அருகில் இஸ்ரவேல் அகழ்வுகள் செய்வதை கண்டித்து UN இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒரு அறிக்கை வெளியிட முனைந்த போது இந்தியா அதை ஆதரித்து வாக்களித்து இருந்தது. ஆனால் ஏறக்குறைய அதே அறிக்கை மீண்டும் ஓக்ரோபர் மாதம் 18 ஆம் திகதி UNயினால் சமர்க்கப்பட்டபோது இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொல்லாது இருந்துள்ளது.
.