TATA தலைமையுள் பெரும் குழப்பம்

Tata

1991 முதல் 2012 ஆம் ஆண்டுவரை Tata Sons நிறுவனத்தின் Chairman பதிவில் இருந்த Ratan Tata ஓய்வு பெற்றபோது, இவரின் இடத்துக்கு Cyrus Mistry என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். கடந்த வியாழன் அன்று Cyrus Mistry அவசரமாக Tata Sons Group தலைமையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். தற்போது 78 வயதுடைய Ratan Tata மீண்டும் இடைக்கால Chairman ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். இவ்விடயம் அத்துடன் நின்றுவிடவில்லை.
.
Cyrus Mistry இடைக்கால Chairman Ratan Tata மீது குற்றங்கள் சுமத்தி உள்ளார். சிங்கப்பூர், மலேசியா நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்ட இந்தியாவின் AirAsia India சுமார் $3.29 மில்லியன் பெறுமதியான மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
.
இன்று சனி Cyrus Mistryயினால் பதவியில் அமர்த்தப்பட்ட மேலும் மூவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். Chief of Human Resources பதவியில் இருந்த N. S. Rajan என்பவர் தனது பதவியில் இருந்து விலகி உள்ளார். அத்துடன் Madhu Kannan மற்றும் Nirmalya Kumar என்போரும் பதவியில் இருந்து விலகி உள்ளனர்.
.
இந்திய பிரதமர் மோதி இவ்விடயம் சம்பந்தமாக Ratan Tataவுடனும் Cyrus Mistryயுடனும் உரையாடி உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. Tata Sons Group ஒரு தனியார் நிறுவனம் (private) ஆனபடியால், பங்கு சந்தையின் மூலம் இயங்கும் பொது (public) நிறுவனத்துக்குரிய சட்டங்களுக்கு உட்படா. ஆனால் Tata Sons உரிமை கொண்டுள்ள பல நிறுவனங்கள் பங்கு சந்தையில் இருப்பதால் இந்திய அரசாங்கம் தலையிடவேண்டி உள்ளது. அதனால் இந்திய ஊழல் தடுப்பு பிரிவு குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்கின்றது.
.

148 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட Tata நிறுவனம் இன்று சுமார் 660,000 ஊழியர்களை கொண்டது. 2016 ஆம் ஆண்டில் இதன் வருமானம் $103.5 பில்லியன். Tata Motors, Jaguar, Land Rover, Tetley (தேயிலை), Tata Communications போன்ற பல நிறுவனங்கள் Tata Sons முதலீடுகளை கொண்டன.
.