அமெரிக்கா தற்போது பயன்படுத்திவரும் யுத்த விமானங்களில் முக்கிய விமானம் Falcon என்று அழைக்கபப்டும் F-16 யுத்த விமானங்கள். 1976 ஆம் ஆண்டுமுதல் சுமார் 4,500 F-16 யுத்த விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவை அமெரிக்க படைகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்கா மட்டுமன்றி பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், துருக்கி, பாகிஸ்தான் போன்ற பல மேற்கு சார்பு நாடுகளும் இந்த யுத்த விமானத்தை பயன்படுத்துகின்றன.
.
.
USSR ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போது அமெரிக்காவின் அரவணைப்பில் இருந்த பாகிஸ்தான் இந்த வகை விமானங்களை பயப்படுத்தி இருந்தது. அதேவேளை இந்தியாவுக்கு எதிராகவும் இந்த விமானங்கள் பாகிஸ்தானால் பயன்படுத்தப்பட்டு இருந்தன.
.
.
அந்த F-16 யுத்த விமானங்களை உட்பத்தி செய்யும் உரிமையை தற்போது இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. வளந்துவரும் சீனாவுக்கு எதிராக இந்தியாவை வளர்க்க அமெரிக்கா முடிந்ததை செய்ய முன்வந்துள்ளது.
.
தற்போது அமெரிக்கா F-16 விமானங்களை பயன்படுத்தினாலும், இனிமேல் அவ்வகை விமானங்களை கொள்வனவு செய்யாது. பதிலாக அமெரிக்கா புதிய வகை F-35 விமானங்களை கொள்வனவு செய்யும்.
.
.
F-16 விமானம் ஒலியைவிட இரண்டு மடங்கு வேகத்தில் பறக்கக்கூடியது.
.
.
தற்போது இந்தியாவே அதிக அளவில் ரஸ்யாவினதும், மேற்கினதும் இராணுவ தளபாடங்களை ஒரேகாலத்தில் பயன்படுத்தும் நாடாகும்.
.
.