சென்னையில் இன்று வெள்ளி சுமார் 600 இலங்கை தமிழ் அகதிகள் போராடத்தில் ஈடுபட்டு உள்ளனர். வேலைவாப்புக்களில் தமக்கு உரிய சலுகைகள் வேண்டும் என்றும், தாம் இலகுவில் நடமாட அனுமதிக்கப்படல் வேண்டும் என்றும் இவர்கள் கேட்டுள்ளனர்.
.
.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் அங்கு அரச தொழில்களை பெறுவது பொதுவாக அனுமதிக்கப்படுவது இல்லை.
.
.
1990 இல் சென்ற தர்மலிங்கம் ராஜா என்பவர் தனது 3ம் சந்ததியுடன் தமிழ்நாட்டு அகதிகள் முகாம்மில் வாழ்வதாகவும், அங்கு தம் மீதான கட்டுப்பாடுகள் மிக அதிகம் என்றும் கூறியுள்ளார். இவர் இலங்கைக்கு திரும்பி செல்ல தன்னிடம் போதிய பண வசதியும் இல்லை என்றும் கூறியள்ளார். தமிழ்நாட்டிலும் தமக்கு இயற்கையான வாழ்க்கை இல்லை என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
.
.
முகாம்களுக்கு வெளியே வாழும் ஒவ்வொரு அகதியும் பொதுவாக வருடம் ஒன்றுக்கு Rs3600 தண்டம் செலுத்தல் (overstaying) அவசியம் என்றும், அத்துடன் புதிய விசாவுக்கு மேலும் Rs13,500 செலுத்த வேண்டும் என்றும் ராஜா கூறியுள்ளார். தம்மிடம் அத்தொகை பணம் இல்லாததாலேயே முகாமில் வசிப்பதாக கூறியுள்ளார்.
.
குணராஜா என்பவர் தானும் தனது குடும்பமும் இலங்கை திரும்புவதானால் 15 இலச்சம் இந்திய நாணயங்களை தண்டமாக செலுத்தல் வேண்டும் என்றுள்ளார். அதனாலேயே தாம் முகாம்களில் உள்ளதாக கூறியுள்ளார்.
.
.
தற்போது சுமார் 1 லச்சம் இலங்கை தமிழ் அகதிகள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும் அதில் சுமார் 60,000 அகதி முகாம்களில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
.