ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட TOP500 என்ற அமைப்பு வருடாந்தம் உலக அளவில் முதல் தரமான 500 கணணிகளை அட்டவணைப்படுத்தும். அந்த அட்டவணையில் இந்த வருடம் சீனாவில் தயாரிக்கப்பட்ட Sunway TaihuLight என்ற CPU கொண்ட கணணி முதலாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த கணணி ஒரு செக்கனில் 1,000,000,000,000,000 (quadrillion) கணிப்புக்களை செய்யக்கூடியது. இதை சீனாவின் National Research Center Engineering & Technology தயாரித்துள்ளது.
.
.
இந்த கணனியின் CPU முற்று முழுதாக சீனாவில் design செய்யப்பட்டு தயாரிக்கப்படதாகும். இரண்டாவது இடத்தில் உள்ள கணனியின் CPU அமெரிக்காவின் Intel நிறுவனத்தால் தயாரிக்கப்படது.ஆனால் அதை design செய்ததுவும் சீன அமைப்பே.
.
சீனா கடந்த 7 வருடங்களாக இந்த அளவீட்டில் முதலிடத்தில் உள்ளது. இந்த வருடம் 167 சீன கணனிகள் முதல் 500 கணணிகளுக்குள் வந்துள்ளன. அடுத்தபடியாக அமெரிக்காவின் 165 கணனிகள் இந்த 500க்குள் உள்ளன. ஜப்பானின் 29 கணனிகளும் இந்த 500இல் அடங்கும்.
.
.
10 வருடங்களின் முன் சீனாவின் 28 கணனிகள் மட்டுமே TOP500 இல் அடங்கி இருந்தன.
.
இந்த வருடம் இந்தியாவின் அதிசிறந்த கணணி 109 ஆம் இடத்தில் உள்ளது. இரண்டாவது சிறந்த இந்திய கணணி 138 ஆம் இடத்தில் உள்ளது.
.
.