எகிப்தின் சிசி (Sisi) ஆட்சியில் இடம்பெறும் அடக்குமுறைகளிலும், கொலைகளிலும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பங்குண்டு என்கிறது Amnesty International.
.
.
2013 ஆம் ஆண்டு ஜூலையில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் பதவிக்கு வந்து, பின் ஜனாயக முறைப்படி ஆட்சியில் இருந்த கட்சியை தடைசெய்துவிட்டு, இராணுவ அதிகாரத்துடன் ஆட்சிக்கு வந்த சிசி தனக்கு எதிரானவர்களை சிறையில் அடைத்தும், கொலைகள் செய்தும் வருகிறார். Amnesty Internationalன் கருத்துப்படி 2013 ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி சிசிக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மட்டும் 817 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். உண்மையில் இந்த தொகை 1,000க்கும் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
.
.
அதேவேளை பல ஐரோப்பிய நாடுகளோ சிசிக்கு பெருமளவில் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. 2014 ஆம் ஆண்டில் மட்டும் இந்த நாடுகள் சுமார் $6.7 பில்லியன் பெறுமதியான ஆயுதங்களை சிசிக்கு வழங்கியுள்ளன என்கிறது Amnesty International. இந்த ஆயுத விற்பனையில் ஜேர்மன் முன்னிக்கிறது.
.