பிரித்தானிய நிறுவனம் ஒன்றிடம் $10,000 பணம் பெற்று அந்நிறுவனத்தின் தயாரிப்பான பொருள் ஒன்று சார்பாக பொய் அறிக்கை வெளிட்ட தென்கொரிய பல்கலைக்கழக பேராசியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பொருளை பாவனை செய்தோரில் 95 பேர் பலியாகி உள்ளனர்.
.
.
பிரித்தானிய Reckitt Benckiser நிறுவனத்தின் தயாரிப்புக்கள் சுமார் 200 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இப்பொருட்களில் Dettol, AirWick, Lysol ஆகியனவும் அடங்கும்.
.
தென்கொரியாவில் இந்நிறுவனம் விற்பனை செய்த humidifier disinfectant கொண்டுள்ள PHMG (Polyhexamethylene guanidine) மற்றும் PGH நஞ்சுகள் காரணமாக 221 பேர் நோய்வாய்ப்பட்டு அதில் 95 பலியாகி உள்ளனர். இவர்களின் நுரையீரல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. மேல் குறிப்பிடப்பட்ட பேராசிரியர் இப்பொருள் பாவனைக்கு உகந்த தரம் கொண்டது என அறிக்கை விடுத்திருந்தார். அதற்கு பிரதியுபகாரமாக $10,000 பெற்றிருந்தார் என்று கைதுக்கான அறிக்கை கூறுகிறது.
.
.
தென்கொரியா போன்ற நாடுகளில் winter காலத்தில் வளி காய்ந்து (dry) பலர் humidifier பயன்படுத்துவதுண்டு. இது வளியில் ஈரலிப்பை அதிகரிக்கும்.
.
.