OPEC பேச்சுவார்த்தை தோல்வி, மசகு விலை வீழ்ச்சி

Oil_Demand

இன்று ஞாயிரு கட்டாரின் (Qatar) உள்ள டோக (Doha) நகரில் இடம்பெற்ற OPEC பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துவதன் மூலம் வீழ்ந்துவரும் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த இந்த கூட்டம் இடம்பெற்று இருந்தது. ஆனால் எண்ணெய் உற்பத்தியில் முக்கிய நாடு ஒன்றான ஈரான் இந்த கூட்டத்தில் பங்கு கொண்டிருக்கவில்லை. சியா முஸ்லீம் நாடான ஈரான் தனது உற்பத்தியை கட்டுப்படுத்தாதவிடத்து சுனி முஸ்லீம் நாடான சவுதியும் தனது எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்த முடிவு எடுக்கவில்லை.
.
செய்தி வெளியானவுடன் அமெரிக்க WTI வகை மசகு எண்ணெய் 5.7% வீதத்தால் வீழ்ந்து $38.05 ஆகியுள்ளது. Brent வகை மசகு எண்ணெய்  விலையும் 5.2% வீதத்தால் வீழ்ந்துள்ளது. மசகு எண்ணெய் விலையின் தளம்பல் நிலை திங்களும் தொடரலாம்.
.
ஈரான் பொருளாதார தடையில் இருந்தபோது சவுதி தனது எண்ணெய் உற்பத்தியை என்றுமில்லாத அளவுக்கு அதிகரித்து இருந்தது. அந்த நிலையில் சவுதி எல்லா நாடுகளையும் இன்றைய உற்பத்தி அளவை கடைப்பிடிக்க எதிர்பார்க்கிறது. ஆனால் பொருளாதார தடை அண்மையில் நீக்கப்பட்ட ஈரான் தற்போதும் சிறிய அளவிலேயே எண்ணெய்யை உற்பத்தி செய்கிறது. தனது உற்பத்தியை அந்த அளவில் மட்டுப்படுத்த ஈரான் மறுக்கிறது. சவுதி போன்ற நாடுகளுக்கு நிகாரான அளவில் ஈரானும் எண்ணெய்யை உற்பத்தி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
.

மிதமிஞ்சிய உற்பத்தி காரணமாக எரிபொருள் விலை தொடர்ந்தும் குறைவாகவே இருக்கும்.
.