Panama Paper என்ற தலைப்பில் அண்மையில் வெளிவந்த சொத்து ஒளிப்பு அம்பலம் ஆக்கல் வலையில் தற்போது பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் சிக்கியுள்ளார். பிரதமரும் அவரது மனைவியும் பிரதமரின் தந்தை இயன் கமரூனின் Baltimore Investment Trust என்ற Mossack Fonseca கணக்கு மூலம் பனாமாவில் 30,000 பவுண்ட்ஸ் சொத்தை வைத்திருந்துள்ளனர்.
.
.
கடந்த செவ்வாய் அன்று பிரதமர் தனது சொத்து எதுவும் Mossack Fonseca மேற்பார்வையில் இருந்திருக்கவில்லை என்று கூறி இருந்தார். பத்திரிகையாளர் கேள்வி ஒன்றுக்கு அவர் “I own no shares, no offshore trusts, no offshore funds, nothing like that. And, so that, I think, is a very clear description.” என்று பதிலளித்து இருந்தார்.
.
.
ஆனால் இன்று வியாழன் அவர் “I sold them all in 2010 because I was going to become prime minister,” என்று கூறியுள்ளார்.
.
.
அத்துடன் பிரதமர், அவரது தந்தையார் இயன் அண்மையில் இறந்தபோது, 300,000 பவுட்ஸை முதுசமாக பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
.
.