சொத்துக்களை ஒளிக்க 214,000 பினாமி நிறுவனங்கள்

ICIJ

The International Consortium of Investigative Journalists (ICIJ) என்ற அமைப்பு, பிரித்தானியாவின் BBC, ஜெர்மனின் Süddeutsche Zeitung பத்திரிக்கை போன்றன இணைந்து நடாத்திய விசாரணை ஒன்றின்படி பனாமா (Panama) நாட்டில் பதிவாகியுள்ள Mossack Fonseca என்ற சட்டத்தரணிகள் நிறுவனம் 214,000 பினாமி நிறுவனங்களை தமது வாடிக்கையாளர் சார்பில் கண்காணித்து உள்ளது. இந்த வாடிக்கையாளர் தமது சொத்துக்களை ஒளித்து வைப்பதற்கே இவ்வாறு பனாமா போன்ற நாடுகளில் பினாமி நிறுவனங்களை வைத்துள்ளனர். இந்த விசாரணை கடந்த 40 வருட தகவல்களை வெளியாக்கி உள்ளது.
.

இந்த விசாரணையின் பட்டியலில் 140 உலக அரசியவாதிகள் அல்லது ஆட்சியில் உள்ளோரும் அடங்குவர். ரஷ்யாவின் தலைவர் பூட்டின் US $2 பில்லியன் பெறுமதியான சொத்துக்களை இவ்வாறு ஒளித்து வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அயர்லாந்து பிரதமர் Sigmundur David Gunnlaugsson மற்றும் அவரது மனைவி ஆகியோர் பல மில்லியன் சொத்துக்களை இவ்வாறு ஒளித்து வைத்திருந்தனராம்.
.
Hong Kong நகரின் பிரபல நடிகர் ஜாக்கி சான் (Jacky Chan), கால்பந்தாட்ட வீரர் Lionel Messi ஆகியோரும் இவ்வாறு பினாமி நிறுவனங்களை வைத்துள்ளனர். பாகிஸ்தானின் பிரதமர் Nawaz Sharif இன் பிள்ளைகள், அஜபர்ஜான் (Azerbaijan) ஜானாதிபதியின் குடும்பத்தினர், எகிப்தின் முபாரக் குடும்பத்தினர் போன்றோரும் இதில் அடங்குவர்.
.

அதுமட்டுமன்றி அமெரிக்கா போன்ற நாடுகளின் தடைக்கு 33 உள்ளான நாட்டு தலைவர்களும், அமைப்புக்களின் தலைமைகளும் இவ்வாறு பினாமி நிறுவனக்கள் மூலம் தமது சொத்துக்களை ஒளித்து வைத்துள்ளனர். அதில் போதை கடத்தல்க்காரர், ஈரானிய தலைவர்கள், வடகொரியா தலைவர் போன்றோரும் அடங்குவர்.
.