இந்தியாவின் கல்கத்தா நகரில் தற்பொழுது கட்டப்பட்டுவந்த மேம்பாலம் (overpass) ஒன்று உடைந்து வீழ்ந்ததில் குறைந்தது 21 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். 100 மீட்டர் நீளம் கொண்ட பகுதி ஒன்றே உடைந்து வீழ்ந்துள்ளது.
.
.
காயமடைந்த சுமார் 70 பேர் கல்கத்தாவில் உள்ள இரண்டு மருத்துவ நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளனர். தற்போது இராணுவம் அகப்பட்டோரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
.
.
இந்த மேம்பாலம் அமைப்பு வேலை மேலும் இரண்டு வருடங்களில் முற்றுபெற இருந்தது.
.