அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது Air Force One விமானத்தில் பயணமானார். அமெரிக்க தலைநகர் வாசிங்டன் DC நேரப்படி இன்று ஞாயிரு பிற்பகல் 1:35 மணிக்கு இந்த விமானம் கியூபாவின் தலைநகர் ஹவானா நோக்கி பறந்தது. ஒபாமாவுடன் அவரது மனைவி, மகள்கள் ஆகியோரும் கியூபா பயணமாகினர்.
.
.
இதற்கு முன் பதவியில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் கியூபா 1928 ஆம் ஆண்டிலேயே. அமெரிக்காவின் 30ஆவது ஜனாதிபதி Calvin Coolidge 1928 இல் கியூபா சென்றிருந்தார். சுமார் 88 வருடங்களின் பின் கியூபா செல்லும் அமெரிக்காவின் 44ஆவது ஜனாதிபதி அங்கு 3 நாட்கள் தங்கி இருப்பார்.
.
.
ஹவானாவில் ஏற்கனவே அமெரிக்க தூதுவர் அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. 1968 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டு இருந்த தபால் சேவையும் அண்மையில் ஆரம்பமாகி இருந்தது. மயாமியில் (Miami) இருந்து சென்ற தபால் பொதிகள் கடந்த புதன் ஹவானாவை அடைந்திருந்தது.
.
.