கடந்த மாதம் Hackers (Internet இணைப்பு மூலம் மாற்றான் கணணிகளுள் அனுமதி இன்றி புகுந்து குழம்பம் விளைவிப்போர்) பங்களாதேசத்தின் (Bangladesh) மத்திய வங்கியின் கணணிகளுள் புகுந்து சுமார் $80 மில்லியன் பணத்தை கையாடி உள்ளனர். ஆனால் இவர்கள் புரிந்த எழுத்துப்பிழையால் மிகுதி பணம் தப்பியது.
.
.
பங்களாதேசத்தின் மத்திய வங்கிக்கும் Federal Reserve Bank of New Yorkஇக்கும் இடையில் விரைவாக பணமாற்றம் செய்ய கணக்குகள் உண்டு. பங்களாதேசத்து மத்திய வங்கியுள் புகுந்த Hackers அந்த கணக்கு விபரங்களை முதலில் கையாடி உள்ளனர். பின் அந்த விபரங்களை பயன்படுத்தி பங்களாதேசத்து மத்திய வங்கியின் பணத்தை Federal Reserve Bank of New Yorkக்கு மாற்றி அதை உடனடியா பிலிப்பீன் (Philippines) மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள கணக்குகளுக்கு மாற்றி கையாடி உள்ளனர்.
.
.
முதல் 4 முயற்சிகளில் $81 மில்லியன் வெற்றிகரமாக கையாடப்பட்டது. ஆனால் 5ஆம் தடவை hackers $20 மில்லியன் பணத்தை இலங்கையில் உள்ள ஒரு NGO வுக்கு மாற்ற முயன்றபோது ‘foundation’ என்பதற்கு பதிலாக ‘fandation’ என்று எழுத, அதில் ஐயம் கொண்ட அலுவகர்கள் விசாரணையை ஆரம்பித்து முடிவில் மிகுதிப்பணம் தப்பியது.
.