ஐ.நா. தனது அதிகாரிகளின் பாலியல் குற்றங்களை மறைக்கிறது

Bolkovac

ஐ.நா. தனது அதிகாரிகள் செய்யும் பாலியல் குற்றங்களை மூடி மறைக்கிறது என முன்னாள் ஐ.நா. விசாரணையாளர் Kathryn Bolkovac கூறியுள்ளார். 2010 ஆம் ஆண்டில் வெளிவந்த The Whistleblower என்ற Hollywood திரைப்படம் இவரின் இவ்வகை குற்றச்சாட்டுகளை கொண்ட புத்தகம் ஒன்றை அடிப்படையாக கொண்டதே.
.
1999 ஆம் ஆண்டில் Kathryn அவர்களை DynCorp என்ற நிறுவனம் மூலம் ஐ.நா. பணிக்கு அமர்த்தி இருந்தது. இவரின் பணி ஐ.நா. அதிகாரிகள், மற்றும் ஐ.நா.வின் கீழான இராணுவ அதிகாரிகள் Bosnia பகுதியில் செய்யும் பாலியல் குற்றங்களை கண்டுபிடித்து தடுப்பதே. ஆனால் இவர் குற்றங்களை கண்டுபிடித்து விசாரணை செய்ய முயன்றபோது DynCorp இல் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின் அவர் கையாண்ட விசாரணைகளும் முடங்கி போயின.
.
இவரின் கூற்றுப்படி அமெரிக்கர், பாகிஸ்தானியர், ஜேர்மன் நாட்டவர், ரூமேனியர், யுக்கிறேனியர் ஆகிய நாட்டவர் இவ்வகை குற்றங்களை செய்துள்ளனர்.
.
தற்போது அதே வகை பாலியல் குற்றச்சாட்டுக்கள் Central African Republic (CAR) என்ற நாட்டிலும் எழுந்துள்ள போதே Kathyn இவ்வாறு கூறியுள்ளார். அவரின் கருத்துப்படி CAR விவாகரங்களும் முன்னர்போல் மூடி மறைக்கப்படலாம்.
.

இவர் தன்னை DynCorp வேலையில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது என்று கூறி DynCorp இக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, நட்டஈடும் பெற்றுள்ளார். பின்னர் இவர் Nobel Peace Prize க்கும் கருத்தில் கொள்ளப்பட்டு இருந்தார்.
.