தற்போது சர்ச்சைக்குரிய தென்சீன கடலில் (South China Sea) உள்ள Woody தீவுக்குள் சீனா தனது யுத்த விமானங்களை நகர்த்தியுள்ள செய்தியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. Woody தீவு சர்ச்சைக்குரிய Paracel தீவு தொகுதிகளில் ஒன்றாகும். இச்செய்திப்படி சீன நனது Shenyang J-11 மற்றும் JH-7 வகை யுத்த விமானங்களை Woody தீவுக்கு நகர்த்தி உள்ளது. Paracel தீவுகளை சீனா மட்டுமன்றி தாய்வானும் வியட்னாமும் உரிமை கூறியுள்ளன.
.
.
கடந்த கிழமை சீனா இந்த Woody தீவுக்குள் HQ-9 வகை நிலத்தில் இருந்து வானத்துக்கான ஏவுகணைகளையும் நகர்த்தி இருந்தது. HQ-9 வகை ஏவுகணைகள் சுமார் 27 Km உயரத்திலும், கிடையாக 200 km தொலைவிலும் பறக்கும் விமானங்களை தாக்கக்கூடியது. இதன் வேகம் ஒலியைப்போல் 4.2 மடங்காகும் (Mach 4.2)
.
.
இவ்வாறு தென் சீன கடலை இராணுவ மயமாக்கலை அமெரிக்கா வன்மையாக கண்டித்துள்ளது. கடந்த மாதங்களில் அமெரிக்கா தனது யுத்தக்கப்பல்களையும் யுத்த விமானங்களையும் இந்த கடல் பகுதியினூடு செலுத்தி இருந்தது.
.