அமெரிக்க Supreme Court நீதிபதிகளில் ஒருவரான Antonin Scalia மரணம் அடைந்ததன் காரணமாக நீதிபதிகளுக்கான வெற்றிடம் ஒன்று தோன்றியுள்ளது. அந்த வெற்றுடத்தை நிரப்ப ஜனாதிபதி ஒபாமா முனைகிறார். சட்டப்படி ஒபாமாவுக்கு அந்த உரிமை உண்டு.
.
.
ஆனால் தற்போது ஜனாதிபதி தேர்தல் வேலைகள் நடைபெறுவதால், அடுத்த ஜனாதிபதியிடம் அந்த பொறுப்பை விடும்படி எதிர் கட்சியான Republican கூறுகிறது.
.
.
ஒபாமா அந்த வெற்றிடத்தை நிரப்ப குறிப்பட்ட சிலரை கணிப்பீடு செய்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு கருத்தில் கொண்டோரில் ஒருவர் இந்தியாவில் பிறந்து அமெரிக்கா குடியேறிய தமிழர் ஆவர்.
.
.
பத்மநாபன் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன் என்ற இவர் தற்போது ஒரு அமெரிக்க Circuit Court நீதிபதி ஆவார். இந்தியாவின் வடக்கே உள்ள சண்டிகார் என்ற நகரில் இவர் பிறந்து இருந்தாலும் இவரின் தந்தை தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவர்.
.
.
1967 ஆம் ஆண்டு பிறந்த இவரின் குடும்பம் 1960 களின் பிற்பகுதில் அமெரிக்கவுக்கு குடிபெயர்ந்து இருந்தனர்.
.
.
இவர் தெரிவு செய்யப்பட்டால் இவரே அமெரிக்காவில் முதல் இந்து Supreme Court நீதிபதியாகவும் இருப்பார்.
.
.
2013 ஆம் ஆண்டில் இவரை அமெரிக்க Senate 97-0 வாக்களித்து Circuit Court நீதிபதியாக தெரிவு செய்திருந்தது.
.