Facebook Free Basics இந்தியாவில் தடை

FreeBasics

பண பலம் கொண்ட Facebook நிறுவனம் 2013 ஆம் ஆண்டில் Free Basics (அப்போது Internet.org) என்ற ஒரு சேவையை ஆரம்பித்தது. இந்த சலுகை smart phone மூலம் cell phone சேவையை பெறும் வறிய நாட்டு மக்களுக்கு இலவச அல்லது குறைந்தவிலை Internet சேவையை கொடுப்பதற்கு என்றே பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் அதன் நோக்கம் வறிய நாட்டு மக்களை Facebook இன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே.
.
இவ்வகை Internet சலுகை பெறுவோர் தாம் நினைத்த எல்லா Webக்களுக்கும் போக முடியாது. இவர்களின் பிரதான Webபாக Facebook மட்டுமே இருக்கும்.
.
இவ்வாறு செய்வதன் மூலம், Facebook,
.
1) அதன் பாவனையாளர்கள் பெறும் செய்திகள், தரவுகளை கட்டுப்படுத்தலாம்.
.
2) இவர்களை அடையும் விளம்பரங்களை கட்டுப்படுத்தி அதிக வருமானம் பெறலாம்.
.
3) புதிய, சிறிய, உள்ளூர் நிறுவனங்கள் தோன்றுவதை, வளர்வதை தடுக்கலாம்.
.
இவ்வாறான பாதக காரணங்களால் இந்தியா Free Basics ஐ தடை செய்துள்ளது. Free Basic என்ற சேவை Internet நடுநிலைமையை குலைக்கிறது என்றுள்ளது இந்தியா.
.
இச்சேவை சாம்பியா, தன்சானியா, கென்யா, கொலம்பியா, பங்களாதேசம், பாகிஸ்தான் போன்ற பல வறிய நாடுகளில் உள்ளது.
.