பெருமளவில் தொலையும் ஆள் இல்லா விமானங்கள்

MQ-1Predator

இன்றைய யுத்தங்களில் அதிகம் பயன்படுவது ஆள் இல்லா வேவு பார்க்கும் மற்றும் தாக்குதல் புரியும் யுத்த விமானங்கள். தொழில்நுட்பங்கள் நிறைந்த இந்த ஆல் இல்லா விமானங்களை உலகின் மறுபக்கத்தில் உள்ள தளம் ஒன்றில் உள்ள விமானி செய்மதிகளின் உதவியுடன் செலுத்துவர். உதாரணமாக ஆப்கானிஸ்தான் மேலே பறக்கும் ஒரு ஆள் இல்லா விமானத்தை அமெரிக்காவில் உள்ள விமானப்படை தளம் ஒன்றில் உள்ள விமானி செலுத்துவர். தேவைப்படின் குண்டும் போடுவார்.
.
ஆனால் இவ்வகை தொழில்நுட்பம் நிறைந்த பல ஆல் இல்லா விமானங்களை அமெரிக்கா இழந்து வருகின்றது. 2001 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை சுமார் 237 இவ்வகை விமானங்களை அமெரிக்கா இழந்துள்ளது. 2012 ஆம் ஆண்டில் மட்டும் 26 இவ்வகை விமானங்கள் விபத்துக்கு உள்ளாகின. 2015 ஆம் ஆண்டில் இத்தொகை 24 ஆகும்.இவை ஒவ்வொன்றும் சுமார் $2 முதல் $5 மில்லியன் வரை பெறுமதியானவை.
.
ஆப்கானிஸ்தானில் மட்டும் 85 இவ்வகை விமானங்கள் இழக்கப்பட்டு உள்ளன. மேலும் 46 விமானங்கள் ஈராக்கில் இழக்கப்பட்டு உள்ளன.
.
2008-07-21 அன்று ஆப்கானிஸ்தானில் காணாமல்போன விமானத்தின் விலை $3.8 மில்லியன் ($3,800,000) ஆகும். இது அமெரிக்காவின் New Mexico மாநிலத்தில் இருந்து இயக்கப்பட்டு இருந்தது. 2009-05-13 அன்று ஆப்கானிஸ்தானில் காணாமல்போன விமானத்தின் விலை $3.9 மில்லியன் ஆகும். இது Navada மாநிலத்தில் இருந்து இயக்கபட்டது. 2011-06-05 அன்று $4.4 மில்லியன் பெறுமதியான விமானம் ஒன்று ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் தொலைந்து இருந்தது.
.
இவ்வாறு தொலையும் பல விமானங்களை அமெரிக்காவினால் மீள எடுக்க முடியாமல் உள்ளது. இவை எங்கே தொலைந்தன என்பதை அமெரிக்கா குறிப்பாக அடையாளம் காணமுடியாது உள்ளது. இவற்றுடனான தொடர்புகள் முற்றாக இழந்து போவதே இவை சென்ற இடம் தெரியாது தொலைய காரணமாக உள்ளது.
.
இவ்வாறு தொலைந்துள்ள விமானங்கள் யார் கையில் சிக்கியுள்ளது என்பதையும் அறியாது அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. இவை இவ்வாறு முற்றாக தொடர்பை இழந்து காணாமல் போக காரணங்கள் என்னவென்றும் தெரியவில்லை.
.
சிலர் இவை மின்னல் தாக்கங்களின் காரணமாக மின் இணைப்பை முற்றாக இழந்திருக்கலாம் என்கின்றனர். அதேவேளை தொழில்நுட்ப அறிவு கூடிய வேறுநாட்டு அறிவாளிகள் இந்த விமானக்கள் உடனான தொடர்புகளை இடைமறித்து தம் கட்டுப்பாட்டில் தரை இறக்கி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
.
அமெரிக்காவின் MQ-1 Predator என்ற ஆளில்லா விமானம் 20 மணித்தியாலங்கள் 25,000 அடி உயரம்வரை பறக்கக்கூடியது. MQ-9 Reaper 50,000 அடி உயரத்தில் பறக்கக்கூடியது.

.