Burkina Faso தாக்குதல் அரச கட்டுப்பாட்டில், 28 பலி

BurkinaFaso

மேற்கு ஆபிரிக்க நாடான Burkina Faso வின் தலைநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது அல்கைடா ஆதரவு குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதல் தற்போது அந்நாட்டின் அரச கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்த தாக்குதலில் 18 நாடுகளை சார்ந்த 28 பேர் பலியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதில் 4 அல்கைடா உறுப்பினரும் அடங்குவர். அந்த நால்வரில் இருவர் பெண்கள் ஆவர்.
.
இந்த தாக்குதல்கள் Splendid ஹோட்டல் மற்றும் அதன் அருகில் உள்ள Cappuccino Cafe ஆகிய இரு இடங்களிலும் ஒரே நேரம் இடம்பெற்றுள்ளன. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 8:30 மணிக்கு இந்த தாக்கதல்கள் ஆரம்பமாகி இருந்தன.
.

இறந்தவர்களில் 6 பேர் கனேடியர் என்று கனடா அறிவித்துள்ளது. இருவர் பிரான்ஸ் நாட்டவர் என்றும், மேலும் இருவர் சுவிட்சலாந்து நாட்டவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
.