இரண்டு அமெரிக்க இராணுவ கப்பல்களை ஈரான் கைப்பற்றியது

PersianGulf

குவைத்தில் இருந்து பஹ்ரெயின் சென்றுகொண்டிருந்த அமெரிக்காவின் இரண்டு சிறிய இராணுவ கப்பல்கள் ஈரான் வசம் உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்த இரண்டு கப்பல்களும் தமது பயணத்தின் இடைவழியில் தமது தளங்களுடனான தொலைத்தொடர்புகளை இழந்துள்ளன. இதற்கு கரணம் இயந்திர கோளாறுகளாக காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
.
அதேவேளை ஈரான் இவர்கள் தமது கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாகவும் அப்போது அவர்கள் கைது கைது செய்யப்பட்டனர் எனவும் கூறியுள்ளது. கைது செய்யப்படவர் தொகை 10 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
.
கைது செய்யப்படவர்கள் அனைவரையும் ஈரான் விடுதலை செய்ய முன்வந்துள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது.
.
உண்மையில் இந்த இரண்டு கப்பல்களுக்கும் என்ன நடந்தது என்பதை அறிய அமெரிக்கா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
.

2007 ஆம் ஆண்டில் இவ்வாறு தமது கடலுள் நுழைந்ததாக கூறி 15 பிரித்தானியர்களை ஈரான் கைது செய்து 13 நாட்களின் பின் விடுதலை செய்திருந்தது.
.