இந்திய விமானப்படை முகாம் மீது தாக்குதல்

PathankotBase

இந்தியாவின் வடக்கே Pathankot என்ற இடத்தில் உள்ள பெரியதோர் இந்திய விமானப்படை முகாமை அடையாளம் காணப்படாத குழு ஒன்று உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 3:30 மணியவில் தாக்கியுள்ளது. தாம் நிலைமையை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இந்திய படை உடனடியாக அறிவித்திருந்தாலும், திங்கள் வரை நிலைமை முற்றாக படையின் கட்டுப்பாட்டுள் வரவில்லை.
.
இந்திய அதிகாரிகள் இந்த குழு பாகிஸ்தானை தளமாக கொண்ட Jaish-e-Mohammed என்ற குழுவாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். தாக்குதலின் போது இக்குழு இந்திய படையினர் போன்றே உடை அணிந்து இருந்தார்.
.
இந்திய படை தனது சனிக்கிழமை அறிவிப்பில் 4 பயங்கரவாதிகளும் 2 படையினரும் இறந்துள்ளதாக கூறியிருந்தது. அத்துடன் 6 படையினர் வரை காயம் அடைந்துள்ளதாகவும் கூறியிருந்தது. அத்துடன் இந்த ஆயுத குழு விலையுயர்ந்த யுத்த விமானங்கள் மற்றும் ஹெலிகள் வைக்கப்படு இருக்கும் இடங்களை அடையவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.
.
ஆனால் திங்கள்கிழமை வரை தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. மேலும் 2 ஆயுததாரிகள் முகாமுள் மறைந்து இருக்கலாம் என்றே இந்த தேடுதல் தொடர்கிறது. அதில் ஒருவர் காயப்படவராகவும் இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
.

பாகிஸ்தான் இந்த தாக்குதலை கண்டித்துள்ளது.
.