உக்கிரம் அடையும் ஈரான்-சவுதி முறுகல்

SaudiEmIran

சியா இஸ்லாமியரான ஈரானுக்கும் சுனி இஸ்லாமியரான சவுதிக்கும் இடையேயான முறுகல் நிலை தற்போது உக்கிரம் அடைந்துள்ளது. இந்த இரு தரப்புக்கும் இடையேயான முரண்பாட்டு போக்கே சிரியா மற்றும் யேமன் போன்ற நாடுகளில் கொடூர யுத்தங்கள் இடம்பெற காரணமாகும்.
.
சனிக்கிழமை சவுதி அரசு சியா இஸ்லாமிய தலைவரான Nimr al-Nimr உட்பட 47 சியா இஸ்லாமியருக்கு மரணதண்டனை வழங்கி இருந்தது. 2011 ஆம் ஆண்டளவில் மத்தியகிழக்கு எங்கும் பரவிய Arab Spring என்ற மக்கள் புரட்சிகளின்போது இவர்கள் சவுதியில் அரச எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதே மரணதண்டனைக்கு காரணமாகும். (அதேவேளை சிரியாவில் அரச எதிர்ப்பு போரில் உள்ள ஆயுத குழுக்களுக்கு சவுதி ஆயுதம் மற்றும் பொருளாதார வசதிகளை முன்னின்று வழங்குகிறது)
.
சியா இஸ்லாமியர் கொல்லப்பட்டதை கடுமையாக எதிர்க்கிறது ஈரான். Nimr al-Nimr உட்பட 47 சியா இஸ்லாமியர் கொல்லப்பட்ட உடன், ஈரானில் உள்ள சவுதி தூதுவரகம் முன் முன் சுமார் 400 ஆர்ப்பாட்டக்காரர் கூடியுள்ளனர். இவர்களுள் சிலர் உள்ளே சென்று தீ வைத்துள்ளனர்.
.
லெபனான் போன்ற நாடுகளிலும் இவ்வாறு சவுதிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று உள்ளன.
.
சவுதி அரச கூற்றுப்படி சவுதியில் எல்லோருமே சுனி இஸ்லாமியர் என்றாலும் உண்மையில் 10% முதல் 25% வரையானோர் சியா இஸ்லாமியர் ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது. இவர்கள் தம்மை சியா ஈரானுடன் இணக்கப்படுத்தியே செயல்படுவர்.
.