சுமார் 9 வருடங்களின் பின் அமெரிக்காவின் Federal Reserve தனது மத்திய அரச வட்டியை 0.25% ஆல் அதிகரித்துள்ளது. நீண்ட காலமாக இந்த வட்டி ஏறக்குறை பூச்சியமாகவே இருந்து வந்தது. அமெரிக்காவின் பொருளாதாரம் ஓரளவு வளர்ந்து உள்ளதால் அந்நாட்டின் மத்திய திறைசேரி தனது வட்டியை .25% ஆல் அதிகரித்துள்ளது.
.
.
இந்த வட்டி வீத அதிகரிப்பு அமெரிக்கர் வீடு, கார் போன்ற பெரும் செலவுகளுக்கு கடன் பெறுவதை சற்று கடினப்படுத்தும். ஆனால் அதேவேளை அமெரிக்க டொலாரின் மதிப்பு உலக நாணய சந்தையில் மேலும் அதிகரிக்கும். சிலரின் கணிப்பிப்படி 1% வட்டி அதிகரிப்பு புதிய கார் விற்பனையை 3% ஆல் குறைக்குமாம்.
.
.
கடந்த 69 மாதங்களாக அமெரிக்க பொருளாதாரம் தொடந்தும் மேலதிக வேலைவாய்ப்புகளை வழங்கி வந்துள்ளது. 2008 ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார சரிவின் பின் இழந்த வேலைவாய்ப்புகளுக்கு நிகரான அளவு வேலைகள் மீண்டும் அங்கு உருவாக்கப்பட்டுள்ளன.
.
.
அமெரிக்காவின் பொருளாதாரம் இவ்வாறு நலமாக தொடரின், அடுத்த ஆண்டின் முடிவுள் அங்கு வட்டி 2.4% வரை ஆகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
.