எகிப்தில் தேர்தல், வாக்காளர் வரவு 21.7% மட்டுமே

EgyptElection

எகிப்தில் நீண்ட காலமாக அமெரிக்காவினதும், இஸ்ரவேலினதும் உதவியுடன் சர்வாதிகார ஆட்சி செய்து வந்த முபாரக்கை மக்கள் போராட்டம் கவிழ்த்தது. அதன் பின் இஸ்லாமிய கொள்கை கொண்ட மோர்சியின் அரசு ஜனநாய முறையில் ஆட்சியை எகிப்தின் கைப்பற்றியது. எதிர்பாராது, மிக குறுகிய காலத்தில் தமது கட்டுப்பாட்டை இழந்த அமெரிக்காவும், இஸ்ரவேலும் மீண்டுமொரு கைபொம்மையான ஸிசியின் இராணுவ ஆட்சி அங்கு இராணுவ சாதியின் மூலம் அமர்த்தின.
.
ஸிசி முதலில் செய்தது ஜனநாயக முறையில் முன்னர் ஆட்சி செய்த கட்சியை பயங்கரவாத குழு என்று கூறி தடை செய்து, மோர்சி உட்பட அதன் தலைவர்களை கைதிகளாக அடைத்தது. அதன் பின் நடாத்திய தேர்தலில் ஸிசி அந்நாட்டின் ஜனாதிபதி ஆனார். இப்போது அங்கு பாராளுமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதும் ஸிசியின் ஆதரவு கட்சியே. இந்த தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றது.
.
முதல் கட்ட தேர்தல் கடந்த 18ம், மற்றும் 19ம் திகதிகளில் நடைபெற்று இருந்தது. அப்போது வாக்காளர் வரவு 26.6% மட்டுமே. அந்த தேர்தலுக்கான run-off தேர்தல் கடந்த 27ம் மற்றும் 28ம் திகதிகளில் இடம்பெற்றது. இந்த run-off தேர்தல் முன்னரை விடவும் குறைவாக, 21,7% வாக்காளர் வரவை மட்டுமே கொண்டிருந்தது.
.

இவ்வாறு எதிரிகளை எல்லாம் அடைத்து விட்டு, ஈராக்கின் சதாம் போன்றோர் தேர்தல் நடாத்தி ஆட்சியை வென்ற போது எள்ளி நகையாடியது மேற்குலகம். ஆனால் தமது கைப்பொம்மையான ஸிசி அவ்வகை நாடகம் நடாத்தும்போது அவ்வாறு ஒரு தேர்தல் நடப்பதை பற்றி எதுவுமே பேசாது ஜனநாயம் காக்கிறது அதே மேற்குலகம். மேற்கின் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, பத்திரிகையாளரும் அவ்வாறே செயல்படுகின்றனர்.
.