ஒரு-பிள்ளை கொள்கையை கைவிடுகிறது சீனா

ChinaPopulation

பெருகி வந்த சனத்தொகைக்கு தேவையான உணவு போன்ற அத்திய அவசிய பொருட்களை வழங்க முடியாத சூழ்நிலை தோன்றிய போது ஒரு பிள்ளை மட்டும் என்ற கட்டாய சட்டத்தை நடைமுறைப்படுத்தியது சீனா. 1977 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டு 70 களின் இறுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த சட்டத்தை சீனா இப்போது இரத்து செய்கிறது.
.
புதிய சட்டப்படி ஒவ்வொரு குடும்பமும் இரண்டு பிள்ளைகளை பெற அனுமதியுண்டு.
.
ஒரு பிள்ளை மட்டும் என்ற கொள்கையால் சுமார் 400 மில்லியன் (400,000,000) பிறப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதனுடன் ஒப்பிடும்போது தற்போதைய அமெரிக்க சனத்தொகை சுமார் 320 மில்லியன் மட்டுமே. சீனாவின் தற்போதைய சனத்தொகை 1.3 பில்லியன் ஆகும்.
.
ஒரு பிள்ளை மட்டும் என்ற சட்டம் பல பாதிப்பான பக்கவிளைவுகளையும் சீனாவுக்கு கொடுத்துள்ளது. சீனாவில் தற்போது பெண்களை விட 33 மில்லியன் அதிகம் ஆண்கள் உண்டு. அதனால் வியட்னாம் போன்ற சில நாடுகளின் எல்லைகளில் வதியும் சீன ஆண்கள் எல்லை கடந்து திருமணம் செய்யவும் வசதிகள் உண்டு. அந்த குடும்பங்கள் சீனாவில் சட்டப்படி குடியுரிமை கொள்ளலாம்.
.

அத்துடன் சீனாவின் விரைவில் பெருமளவு முதியோர்களையும் சிறிதளவு இளம் வயதினரையும் கொண்டிருக்க போகிறது.
.