சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா (Mecca) என்ற முஸ்லிம்களின் புனித தலத்தில் பாரம் தூக்கி (crane) ஒன்று சரிந்து வீழ்ந்ததால் குறைந்தது 107 பேர் மரணமாகியுள்ளனர். மேலும் 230 பேர் வரையிலானோர் காயம் அடைந்துள்ளனர்.
.
.
இந்த மாத இறுதியில் வரவுள்ள ஹஜ் (Hajj) யாத்திரிகர்களின் பயன்பாட்டுக்கு வசதிகள் செய்ய பயன்படுத்திய பாரம் தூக்கியே இவ்வாறு வீந்துள்ளது. அப்பகுதியில் இடம்பெற்ற புயலே இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. அங்கு காற்றின் வேகம் 83 km/h ஆக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
.
.
புதிய கட்டுமான வேலைகள் 2.2 மில்லியன் யாத்திரிகர்களை உள்ளடக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டு இருந்தது.
.
.
2006 ஆம் ஆண்டில் இங்கு இடம்பெற்ற சனநெரிசலில் 350 பேர் பலியாகி இருந்தனர்.
.