யூக்கிறேன் யுத்த நிறுத்த முயற்சியை அமெரிக்கா கைவிடும்?

யூக்கிறேன் யுத்த நிறுத்த முயற்சியை அமெரிக்கா கைவிடும்?

அடுத்து வரும் சில தினங்களில் யூக்கிறேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்று ஏற்படாவிட்டால் அமெரிக்கா யுத்த நிறுத்தத்துக்கான முயற்சிகளை கைவிடும் என்று Marco Rubio என்ற அமெரிக்க Secretary of State இன்று வெள்ளி கூறியுள்ளார்.

Rubio தனது உரையில் அமெரிக்கா மாதங்களுக்கோ, கிழமைகளுக்கோ பேச்சுக்களை செய்யாது என்றும் இணக்கம் சில தினங்களில் ஏற்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

பூட்டின் ரஷ்யா கைப்பற்றிய இடங்களை கைவிடும் என்று பெரும்பாலானோர் கருதவில்லை. ரஷ்யா கைப்பற்றிய இடங்களை தாரைவார்த்து யூக்கிறேன் ஒரு யுத்த நிறுத்தத்தை அடைவது செலன்ஸ்கிக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் மிக பெரும் அவலம் ஆகும்.

அத்துடன் யூக்கிறேன் NATO அணியில் இனையக்கூடாது என்றும் பூட்டின் நிபந்தனை விடுத்துள்ளார். இந்த தீர்மானத்தை யூக்கிறேன் முன்னர் செய்திருந்தால் சண்டையை முதலிலேயே தடுத்து இருக்கலாம்.

சனாதிபதி தேர்தல் காலத்தில் தான் சனாதிபதியாக வெற்றி அடைந்தால் 24 மணி நேரத்தில் யூக்கிறேன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று பறைசாற்றிய ரம்ப் தற்போதே எல்லோரையும் தான் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்கிறார். குறிப்பாக ரஷ்ய சனாதிபதியை கட்டுப்படுத்தும் வல்லமை, அறிவு எதுவும் ரம்பிடம் இல்லை.