மனைவி உஷாவுடன் இந்தியா செல்கிறார் அமெரிக்க உதவி சனாதிபதி JD

மனைவி உஷாவுடன் இந்தியா செல்கிறார் அமெரிக்க உதவி சனாதிபதி JD

அமெரிக்க உதவி சனாதிபதி JD வான்சும் (JD Vance) மற்றும் அவரின் இந்திய பெற்றாருக்கு அமெரிக்காவில் பிறந்த மனைவி உஷாவும் இத்தாலிக்கும், இந்தியாவுக்கும், பயணிக்கின்றனர்.

முதலில் வியாழன் இத்தாலிக்கும், அங்கிருந்து பின்னர் இந்தியாவுக்கும் இருவரும் பயணிக்கின்றனர். உதவி சனாதிபதியின் பயண நோக்கம் இரண்டு நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதே.

இத்தாலியின் ரோம் நகருக்கு செல்லும் வான்ஸ் இத்தாலிய பிரதமர் Giorgia Meloni ஐ சந்திப்பார். அங்கிருந்து அடுத்த கிழமையின் ஆரம்பத்தில் டெல்லி செல்லும் வான்ஸ் பிரதமர் மோதியை சந்திப்பார்.

பின்னர் இத்தாலியின் பிரதமர் அமெரிக்க வெள்ளை மாளிகை சென்று சனாதிபதி ரம்பை சந்திப்பார்.

Meloni யும், மோதியும் ஏற்கனவே ஓரளவு ரம்புக்கு ஆதரவான போக்கை கொண்டவர்கள்.