அமெரிக்க பொருளாதாரத்தை குழப்பும் ரம்பின் வரி அறிவிப்புகள்

அமெரிக்க பொருளாதாரத்தை குழப்பும் ரம்பின் வரி அறிவிப்புகள்

அமெரிக்க பொருளாதாரம் மிக பெரியது. குறிப்பாக நவம்பர் மாத இறுதியில் வரும் அமெரிக்க Thanksgiving முதல் டிசம்பர் மாதம் வரும் Boxing Day வரையிலான காலத்தில் பெருமளவு பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

இவற்றில் smartphone, computer, ஏனைய இலத்திரனியல் பொருட்கள் ஆகியன பெருமளவில் சீனாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. இவ்வகை order கள் குறைந்தது 8 மாதங்களுக்கு முன் சீன நிறுவனங்களுக்கு வழங்கப்படும். 

சீன நிறுவனங்கள் தேவையான மூல பொருட்களை கொள்வனவு செய்து, பாகங்களை தயாரித்து, இறுதி பொருளை பொருத்தி, கப்பல்களில் அனுப்ப 8 மாதங்கள் வரை தேவைப்படும்.

ஆனால் ரம்ப் நாளுக்கு ஒரு இறக்குமதி வரி கதை கூறுவதால் அமெரிக்க விற்பனையாளர் பொருட்களின் தொகை, விற்பனை விலை ஆகியவற்றை தீர்மானிக்க முடியாது உள்ளனர்.

சீன பொருட்களுக்கு ரம்பின் இறக்குமதி வரி கடந்த 2 மாதங்களில் 10% ஆகி, 20%  ஆகி, பின் 54% ஆகி, அது 104% ஆகி, பின் 125% ஆகி, பின் 145% ஆகியுள்ளது. Apple போன்ற நிறுவங்களின் அழுத்தம் காரணமாக கடந்த வெள்ளி இலத்திரனியல் பொருட்களுக்கு தற்காலிக வரி விலக்கு என்றுஅறிவித்த ரம்ப் அரசு, பின் இலத்திரனியல் பொருட்களுக்கு தனியாக வரி அறிவிக்கப்படும் என்று மீண்டும் குழப்பி உள்ளது.