அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரியை சீனா 84% இல் இருந்து 125% ஆக உயர்த்தி உள்ளது. ரம்ப் சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 145% ஆக உயர்த்திய பின்னரே சீனா தனது வரியை 125% ஆக உயர்த்தியது.
அத்துடன் அமெரிக்க பொருட்கள் மீதான 125% வரியே இறுதி வரி என்றும், இதற்கு மேல் தமது வரி உயர்த்தப்படாது என்றும் சீனா கூறியுள்ளது. இதற்கு மேலான வரி ஒரு number game மட்டுமே என்றுள்ளது சீனா.
அதாவது ஒரு $100,000 பெறுமதியான அமெரிக்க Tesla கார் ஒன்றை 125% இறக்குமதி வரியுடன் $250,000 க்கு எவரும் கொள்வனவு செய்யப்போவது இல்லை. பதிலுக்கு வேறு கார் ஒன்றையே கொள்வனவு செய்வார். சுமார் $300 மில்லியன் பெருமதியான அமெரிக்க Boeing விமானம் ஒன்றை எந்தவொரு சீன விமான சேவையும் $600 மில்லியனுக்கு கொள்வனவு செய்யப்போவது இல்லை. பதிலுக்கு Airbus விமானம் ஒன்றையே கொள்வனவு செய்வர்.
அதனால் 200%, 300% வரி எல்லாம் வெறும் இலக்கங்கள் மட்டுமே. அவ்வாறு வரியை தொடர்ந்தும் அதிகரிப்பது செத்த பாம்பை அடிப்பது போலாகும். அதனால் ரம்ப் தற்போது வேறு வழியில் முரண்பட தள்ளப்பட்டுள்ளார்.
அத்துடன் சீன சனாதிபதி தனது உரையில் கடந்த 70 ஆண்டுகளாக சீனா சொந்த காலில் வளர்ந்ததாகவும், இனிமேல் எவருக்கும் அடிபணியப்போவது இல்லை என்றும் கூறியுள்ளார்.