அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் தொடரும் ரம்பின் பொருளாதார யுத்தம் காரணமாக சீனா அமெரிக்க ஹொலிவூட் திரைப்படங்களை வியாழன் தடை செய்துள்ளது.
ஒரு காலத்தில் ஹொலிவூட் திரைப்படங்கள் சீனாவை முழுமையாக ஆக்கிரமித்து இருந்தாலும், அண்மைக்கால தரமான சீன திரைப்படங்கள் சீனாவில் பெரும் ஆதரவை பெற்றுள்ளன. அதனால் சுமார் 80% சீன திரைப்பட வருமானம் சீன திரைப்படங்கள் மூலமே கிடைக்கின்றன.
உதாரணமாக சீனா தயாரித்த Ne Zha 2 என்ற கார்ட்டூன் திரைப்படம் அமெரிக்காவின் Pixar நிறுவனம் தயாரித்த Inside Out 2 என்ற கார்ட்டூன் திரைப்படத்தை வருமானத்தை பின்தள்ளி உள்ளது.
தற்காலங்களில் சீனா ஒவ்வொரு ஆண்டும் 10 ஹொலிவூட் திரைப்படங்களை மட்டுமே இறக்குமதி செய்கிறது. ஆனால் அந்த 10 திரைப்படங்களும் பெரும் செலவில் தயாரிக்கப்படும் முன்னணி ஹொலிவூட் திரைப்படங்கள்.
பொருட்கள் மீது இறக்குமதி தடை நடைமுறை செய்யும்போது இரண்டு நாடுகளுக்கும் பாதிப்பு உண்டு. ஆனால் திரைப்படம் போன்றவற்றை தடை செய்யும்போது இறக்குமதி செய்த நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.