சீனாவின் 84% பதிலடி வரியால் விசனம் கொண்ட ரம்ப் 104% ஆக அறிவித்திருந்த சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை புதன்கிழமை 125% ஆக உயர்த்தி உள்ளார். அதேவேளை பங்கு சந்தைகளின் பாரிய இழப்புகளை குறைக்கும் நோக்கில் ஏனைய நாடுகளுக்கான இறக்குமதி வரியை 90 தினங்களுக்கு 10% ஆக மட்டும் கொண்டிருக்கவும் அறிவித்துள்ளார்.
சீனா மீதான இந்த புதிய 125% வரி உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மிகையான இருதரப்பு வரிகளால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தகம் சுமார் 80% ஆல் வீழ்ச்சி அடையலாம் என்று கணிக்கப்படுகிறது.
ஆனாலும் சீனா தயாரிக்கும் பொருட்களை வேறு எந்த நாடும் உடனைடியாக தயாரிக்க முடியாது.
ரம்பின் இந்த 90 தின பின்வாங்கல் அறிவிப்புக்கு அமெரிக்க பங்கு சந்தைகள் பெரிய அளவில் மாற்றம் எதையும் காட்டவில்லை.
உலகின் முதலாவது பெரிய வர்த்தகமான அமெரிக்காவுக்கும், இரண்டாவது பெரிய வர்த்தகமான சீனாவுக்கும் இடையில் பெரிய வரி யுத்தம் நிகழ்வதை பங்கு சந்தைகள் விரும்பவில்லை.
ரம்பின் புதிய 125% வரிக்கு சீனா என்ன செய்யும் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை.