அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஆரம்பித்த இறக்குமதி வரிகள் காரணமாக கடந்த 3 தினங்களாக அமெரிக்க மற்றும் உலக பங்கு சந்தைகள் பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ளன.
இதற்கிடையில் நேற்று திங்கள் X அல்லது Twitter எனப்படும் social media வில் வெளிவந்த பொய் செய்தி ஒன்று அமெரிக்க பங்கு சந்தை சுட்டிகளை பல ட்ரில்லியன் பெறுமதியால் அதிகரிக்க செய்து, பின் சில நிமிடங்களில் மீண்டும் வீழ்த்தி உள்ளது.
இந்த social media பொய் செய்தியால் பலர் பெருமளவு பணம் பெற, பலர் பெருமளவு பணத்தை இழந்து இருப்பர்.
குறைந்தது 50% மேலான social media களில் வெளியாகும் செய்திகள், தரவுகள், விளக்கங்கள் பொய்யானவையே. ஆனால் நேற்றைய பொய் பல ட்ரில்லியன் பெறுமதியானது.
நேற்று திங்கள் நியூ யார்க் நேரப்படி காலை 8:30 மணிக்கு ரம்பின் அதிகாரி Kevin Hassett ரம்ப் தனது புதிய வரிகளை 90 தினங்களுக்கு இடைநிறுத்துவது தொடர்பாக தீர்மானம் எடுக்கக்கூடும் என்ற ஆதாரம் அற்ற கருத்து ஒன்றை Fox செய்தி நிறுவனத்துக்கு கூறியிருந்தார்.
காலை 9:30 மணிக்கு பங்கு சந்தைகள் ஆரம்பமாகின.
காலை 10:11 மணிக்கு Hammer Capital என்ற X பதிவு இந்த பொய்யான செய்தியை X இல் பதிவு செய்தது. உடனே இந்த செய்தி காட்டு தீ போல பரவ ஆரம்பித்தது. CNBC, Reuters போன்ற பெரும் செய்தி நிறுவனங்களும் இந்த பொய்யான செய்தியை பரப்ப ஆரம்பித்தன.
காலை 10:12 மணிக்கு பங்கு சந்தைகள் இந்த செய்தியை கொண்டா ஆரம்பித்தன. கடந்த 3 தினங்களாக தமது பங்குகளை விழுந்தடித்து விற்பனை செய்தோர் மீண்டும் பங்குகளை விழுந்தடித்து கொள்வனவு செய்ய ஆரம்பித்தனர்.
இந்த பொய் செய்தியால் காலை 10:08 முதல் 10:18 வரையான காலத்தில் DOW பங்கு சந்தை மட்டும் சுமார் $2.4 டிரில்லியன் பெறுமதியால் உயர்ந்து பின் வீழ்ந்து உள்ளது.
