மார்ச் மாதம் 23ம் திகதி பலஸ்தீன செஞ்சிலுவை சங்க மருத்துவர்களுடன் சென்ற 15 தொண்டர்கள் இஸ்ரேலின் படைகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்களின் உடல்களை இஸ்ரேல் படைகள் ஆழமற்ற குழிகளில் புதைத்து இருந்தன.
இஸ்ரேல் முதலில் மரணித்தோர் ஹமாஸ் மற்றும் ஜிஹாத் பயங்கரவாத உறுப்பினர் என்று கூறியிருந்தது.
ஆனால் ஐ.நா. மரணித்தோர் மருத்துவர் என்றது. சர்வதேச குழுக்களின் கடுமையான முயற்சியின் பின்னரே இஸ்ரேல் ஐ.நா. ஆதரவு அதிகாரிகள் படுகொலை இடம்பெற்ற இடத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
படுகொலை நிகழ்ந்த இடத்தில் அதிகாரிகள் 8 paramedics களினதும், 6 Gaza Civil Defense ஊழியர்களினதும், 1 ஐ.நா. ஊழியரினதும் உடல்கள்ஆழமற்ற புதைகுழிகளில் இருந்து கண்டெடுத்தனர்.
அந்த உடல்களுக்குரியவரில் ஒருவரின் உடமைகளில் இருந்த அவரின் phone வீடியோ சம்பவத்தை படம்பிடித்து காட்டியுள்ளது. இந்த வீடியோவில் தீயணைக்கும் வண்டி, ambulance ஆகியன head light, emergency light, உள் light ஆகியவற்றுடன் செல்வது காணக்கூடியதாக உள்ளது. இவற்றை அறிந்தே இஸ்ரேல் இவர்களை தாக்கி உள்ளது.
இந்த விடீயோ வெளிவந்த பின் இஸ்ரேல் கதையை மாற்றி, தாம் உண்மையை அறிய விசாரணை செய்வதாக கூறியுள்ளது.