கடந்த தமிழ்நாடு மாநில தேர்தலில் அண்ணாமலை தலைமயிலான தமிழ்நாடு பா.ஜ. கட்சி படுதோல்வி அடைந்தாலும், அண்ணாமலையும் தேர்தலில் வெற்றி பெறாததாலும் தமிழ்நாடு பா.ஜ. கட்சி திராவிட கட்சியான அ.தி.மு.க. வுடன் இணைந்து போட்டியிட முயற்சிக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்த கூட்டு முயற்சிக்கு தற்போதைய தமிழ்நாட்டு பா.ஜ. தலைவர் பதவி அண்ணாமலையிடம் இருந்து பறிக்கப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.
அண்ணாமலைக்கு பதிலாக Nainar Nagendran என்பவர் பா.ஜ வின் தமிழ்நாட்டு தலைவர் ஆகலாம். அத்துடன் இந்த கூட்டு வென்று ஆட்சி அமைத்தால் அந்த ஆட்சியில் அ.தி.மு.க கட்சியின் தலைவர் முதலமைச்சர் ஆக வசதியாகவும் இருக்கும்.
அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசுவாமியும், அண்ணாமலையும் Gounder சமூகத்தினர். Nagendran Thevar சமூகத்தவர். இரண்டு சமூகத்தினரின் வாக்குகளையும் கவரும் நோக்கில் கூட்டு நாகேந்திரனை பயன்படுத்த முனையலாம்.
முன்னாள் அ.தி.மு.க. உறுப்பினரான நாகேந்திரன் தற்போது பா.ஜ. வின் திருநெல்வேலி MLA ஆவார்.
இந்த செய்தி இதுவரை முறைப்படி அறிவிக்கப்படவில்லை.