2023ம் ஆண்டு உலகத்தில் அதிக அளவு Black tea (அல்லது Red tea) என்ற பதப்படுத்தப்பட்ட (fermented) தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை கென்யாவுக்கு பின்னால் இரண்டாம் இடத்தில் இருந்தது. ஆனால் 2024ம் ஆண்டு இந்தியா இலங்கையை 3ம் இடத்துக்கு பின் தள்ளி 2ம் இடத்தை அடைந்துள்ளது.
2023ம் ஆண்டு 231 மில்லியன் kg தேயிலையை ஏற்றுமதி செய்த இந்தியா 2024ம் ஆண்டு 255 மில்லியன் kg தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது.
இந்திய தேயிலை ஏற்றுமதியின் 20% ஈராக்குக்கு சென்றுள்ளது.
இலங்கையின் தேயிலை உற்பத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியே இந்திய தேயிலை ஏற்றுமதி அதிகரிப்புக்கு காரணமாகி உள்ளது.
சீனா பெருமளவு Green tea யையும் ஏற்றுமதி செய்யும் நாடு. அனைத்து வகை தேயிலைகளையும் கருத்தில் கொண்டால் 2023ம் ஆண்டில் சீனாவே அதிக தேயிலையை ஏற்றுமதி செய்து முதலாம் இடத்தில் உள்ள நாடு ($1.7 பில்லியன்). கென்யா 2ம் இடத்திலும் ($1.4 பில்லியன்), இலங்கை 3ம் இடத்திலும் இருந்தன ($1.3 பில்லியன்).