இலான் மஸ்க்கின் (Elon Musk) பெரும்பான்மை உரிமை கொண்ட அமெரிக்காவின் Tesla என்ற மின்னில் இயங்கும் கார் நிறுவனத்தின் வருமானத்தை பின் தள்ளி கடந்த ஆண்டு சீனாவின் BYD என்ற மின்னில் இயங்கும் கார் நிறுவனத்தின் விற்பனை $107 பில்லியனுக்கும் அதிகமாகி உள்ளது.
அத்துடன் BYD யின் நிகர இலாபமும் (net profit) 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 34% ஆல் அதிகரித்து $5.5 பில்லியன் (40.3 பில்லியன் யுவான்) ஆகியுள்ளது.
2024ம் ஆண்டு Tesla வின் வருமானம் (revenue) $97.7 பில்லியன் ஆக இருக்கையில், சீன BYD யின் வருமானம் $107 பில்லியன் (777 பில்லியன் சீன யுவான்) ஆகியுள்ளது.
BYD யின் 2024ம் ஆண்டுக்கான வருமானம் அதன் 2023ம் ஆண்டுக்கான வருமானத்திலும் 29% அதிகம்.
2024ம் ஆண்டு Tesla 1.79 மில்லியன் மின்னில் இயங்கும் கார்களை விற்பனை செய்ய, BYD 1.76 மில்லியன் மின்னில் இயங்கும் கார்களை விற்பனை செய்துள்ளது.
Hybrid வகை கார் விற்பனையும் சேர்த்து கணித்தால் 2024ம் ஆண்டு BYD 4.27 மில்லியன் கார்களை விற்பனை செய்துள்ளது. அத்தொகை அமெரிக்காவின் Ford நிறுவனத்தின் விற்பனைக்கு நிகரானது.
ரம்புடன் இணைந்து இலான் மஸ்க் மக்கள் வெறுப்பை தேடிக்கொள்வதால் 2025ம் ஆண்டு Tesla வின் வருமானம் மேலும் பாரிய வீழ்ச்சியை அடையும்.
இந்த ஆண்டு BYD அறிமுகம் செய்த மின்னில் இயங்கும் கார் சுமார் 5 நிமிட charge ஒன்றுக்கு 400 km செல்லும் என்று கூறப்படுகிறது. இது Tesla வின் தரத்திலும் இரு மடங்கு தரமானது.