கனடாவில் ஏப்ரல் 28 பொது தேர்தல்

கனடாவில் ஏப்ரல் 28 பொது தேர்தல்

கனடாவின் முன்னாள் பிரதமர் ரூடோ விரட்டப்பட்ட பின் உட்கட்சி வாக்கெடுப்பு மூலம் பிரதமராகிய மார்க் கார்னி (Mark Carney) வரும் ஏப்ரல் 28ம் திகதி பொது தேர்தலை கொண்டிருக்க அறிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை தேர்தலில் போட்டியிடாத மார்க் கார்னி தலைநகர் Ottawa வுக்கு அண்மையில் உள்ள Nepean தொகுதிலும் போட்டியிடுகிறார்.

ரூடோ ஆட்சி காலத்தின் இறுதி பகுதியில் அவரின் லிபெரல் (Liberal) கட்சி படுதோல்வி அடையும் நிலையிலேயே இருந்தது. அதனாலேயே ரூடோ பிரதமர் பதவியில் இருந்து விரட்டப்பட்டார்.

மார்க் கார்னி தலைமையில் லிபெரல் கட்சிக்கான ஆதரவு கணிசமான அளவு அதிகரித்து உள்ளதாக அபிப்பிராய வாக்கெடுப்புகள் கூறுகின்றன. ஆனாலும் லிபெரல் கட்சிக்கும், Conservative கட்சிக்கும் இடையிலான போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில் திடமான ஆட்சி அமையவில்லை என்றால் அது ரம்பின் தாண்டவத்துக்கு மேலும் நலனாக அமையும்.

இந்த மாதம் மார்க் கார்னி தலைமையில் புதிய அமைச்சர்களை கொண்டு உருவான அமைச்சரவை சில தினங்களில் பதவி விலகும் அல்லது மாற்றி அமைக்கப்படும்.