யூக்கிறேன் கைப்பற்றிய Kursk பகுதியை ரஷ்யா மீட்டது

யூக்கிறேன் கைப்பற்றிய Kursk பகுதியை ரஷ்யா மீட்டது

ரஷ்யா யூக்கிறேனை ஆக்கிரமித்த பின் யூக்கிறேன் செய்த வியத்தகு இராணுவ நடவடிக்கைகளில் ஒன்று சுமார் 1,376 சதுர km பரப்பளவு கொண்ட Kursk என்ற எல்லையோர ரஷ்ய பகுதியை கடந்த ஆகஸ்ட் மாதம் கைப்பற்றியது. ரஷ்யா இங்கே பலத்த பாதுகாப்பு எதையும் கொண்டிருக்கவில்லை.

1941ஆண்டு ஹிட்லரின் படைகள் ரஷ்யாவை ஆக்கிரமித்த பின் அந்நிய படை ஒன்று ரஷ்யாவை ஆக்கிரமித்தது இதுவே முதல் தடவை. இதற்கு அமெரிக்காவின் ஆயுத உதவியும், புலனாய்வு உதவியும் மிகவும் உதவின.

ஆனால் சனாதிபதி ரம்ப் உதவிகளை நிறுத்திய பின் யூக்கிறேன் Kursk பகுதியை தொடர்ந்தும் கொண்டிருக்க முடியாது தவித்தது. இங்கே யூக்கிறேன் படைகள் பெரும் இழப்புகளை சந்தித்தது. அவ்வகை இழப்புகளை கொண்ட இந்த முயற்சி அவசியமானதா என்று தற்போது வினாவுகின்றனர் சில யூக்கிறேனியர்.

ரஷ்யாவின் உதவிக்கு வந்த வட கொரிய படைகளும் Kursk பகுதியில் போராடின.

Kursk பகுதி தற்போது மீண்டும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.