SpaceX ஏவுகலம் வெடித்து வீழ்ந்தது

SpaceX

இன்று ஞாயிற்றுக்கிழமை SpaceX (Space Exploration Technologies) நிறுவனத்தினால் Cape Canaveral தளத்தில் காலை 10:21 மணிக்கு ஏவப்பட்ட Falcon 9 என்ற கலம் ஏவப்பட்டு 2 நிமிடம் 19 செக்கன்களில் வெடித்து அத்திலாத்திக் சமுத்திரத்தில் வீழ்ந்துள்ளது. மனிதர்கள் அற்ற இந்த கலத்தில் International Space Stationக்கு (IIS) பொருட்கள் எடுத்து சென்றிருந்தது.
.
இது 208 அடி நீளமானது. வெடிக்கும் போது அக்கலம் 32 km உயரத்தில் 1 km/second வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. இதில் 4,000 இறாத்தல் பாவனை பொருட்கள் இருந்துள்ளன.
.
பண நெருக்கடிகளுக்கு உள்ளான NASA தனியார் நிறுவனங்களின் உதவியுடன் விண்வெளி பயணங்களை தொடர முன்வந்திருந்தது. அதன்படி SpaceX
நிறுவன ஏவுகலம் IISக்கு பொருட்களை எடுத்து செல்ல உடன்பட்டிருந்தது. தற்போது அமெரிக்க விண்வெளி வீரர்கள், IIS செல்லும் அமெரிக்க பொருட்கள் எல்லாம் ரஷ்யாவின் கலம்கள் மூலமே எடுத்து செல்லப்படும்.
.

கடந்த 8 மாதங்களில் 3 விண் கலம்கள் வெடித்து வீழ்ந்துள்ளன. கடந்த October மாதத்தில் அமெரிக்காவினால் ஏவப்பட்ட இன்னுமோர் கலம் வெடித்து வீழ்ந்திருந்தது. அதற்கு முன் April மாதத்தில் ரஷ்யா செலுத்திய கலம் ஒன்று வெடித்து வீழ்ந்திருந்தது.
.