இந்தியாவில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டவரும், வெளிநாட்டு நிறுவனங்களும் கடந்த 6 மாதங்களில் சுமார் $29 பில்லியன் பங்குச்சந்தை முதிலீடுகளை இந்தியாவில் இருந்து பின்வாங்கி அவற்றை சீனாவில் முதலீட்டு உள்ளனர்.
இவ்வாறு வெளிநாட்டவர் தமது முதலீடுகளை பின்வாங்கியதால் இந்தியர் சிலரும் தமது முதலீடுகளை பின்வாங்கியதால் இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 6 மாத காலத்தில் சுமார் $1 டிரில்லியன் (1,000 பில்லியன்) பங்குச்சந்தை பெறுமதியை இழந்துள்ளன.
சீனாவின் நிறுவனங்கள் தமது பங்குகளை விற்பனை செய்யும் ஹாங் காங் Hang Seng பங்குச்சந்தை கடந்த 6 மாதங்களில் 36% ஆல் அதிகரித்து உள்ளது.
DeepSeek போன்ற சில சீன நிறுவனங்கள் தொழிநுட்பத்தில் அமெரிக்காவே வியக்கும் வண்ணம் சாதனைகள் செய்ததால் முதலீட்டாளர் சீனா பக்கம் மீண்டும் செல்கின்றனர்.
மேற்கு அரசியல் இந்தியாவை வளர்த்து சீனாவை அழிக்க முனைந்தாலும் சீனாவின் கண்டுபிடிப்புகள் முதலீட்டாளரை கவர்ந்தவண்ணம் உள்ளன.