செவ்வாய்க்கிழமை அமெரிக்க சனாதிபதி ரம்ப் ரஷ்ய சனாதிபதி பூட்டினுடன் யூக்கிறேன் யுத்தம் தொடர்பாக உரையாடினார். ரம்ப் சனாதிபதி ஆனபின் செய்துகொண்ட பெரிய உரையாடல் இதுவே. ரம்ப் தரப்பு இதில் பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருந்தது. ஆனாலும் ரம்பின் எதிர்பார்ப்புகளுக்கு பூட்டினுக்கு பலத்த தோல்வியை வழங்கி உள்ளார்.
ரம்ப் குறிப்பிடக்கூடிய அளவு யுத்த நிறுத்தம் ஒன்றையே பூட்டினிடம் எதிர்பார்த்தார். அவ்வகை அறிவிப்பு ரம்புக்கு தான் ஒரு ‘deal maker’ என்று பறைசாற்ற உதவியிருக்கும்.
ஆனால் பூட்டின் 30 தினங்களுக்கு யூக்கிறேன் ‘energy infrastructure’ மீது குண்டுகள் வீசமாட்டேன் என்று ஒரு சிறு விலக்கை மட்டுமே வழங்கி உள்ளார். யூக்கிறேனின் energy கட்டுமானங்கள் ஏற்கனவே ரஷ்ய படைகளால் அழிக்கப்பட்டு உள்ளன. அதனால் தொடர்ந்து அழிப்பதற்கு யூக்கிறேனில் பெரிதாக எதுவும் இல்லை.
ஆனால் மேற்படி கூற்றிலும் ரம்ப் தரப்பு குழம்பி முழிக்கிறது. ரம்ப் தனது கூற்றில் “energy infrastructure’ என்று கூற, அவரின் வெள்ளை மாளிகை பேச்சாளர் ‘energy and infrastructure’ என்று கூறுகிறார். அதாவது ரம்ப் தரப்பு and ஐ நுழைப்பதன் மூலம் முட்டையில் சிகை பிடுங்க முனைகிறது.