அமெரிக்காவின் Colorado மாநிலத்து டென்வர் நகரின் Denver International விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீ பற்றியதால் பயணிகள் பாதுகாப்பு தேடி விமானத்தின் இறக்கைக்கு சென்றனர். விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் தப்பி உள்ளனர்.
Colorado மாநிலத்தின் Colorado Springs என்ற நகரத்தில் இருந்து Dallas Fort Worth விமான நிலையம் நோக்கி சென்ற விமானத்து இயந்திரம் ஒன்றில் உதறல் சத்தம் தோன்றியதால் விமானம் உடனே டென்வர் விமான நிலையத்துக்கு திசை திருப்பி தரை இறக்கப்பட்டது.
தரை இறங்கிய விமானம் ஓடுபாதையில் இருந்து வெளியேறி Gate C38 க்கு சென்றது. அங்கேயே விமான இயந்திரம் தீ பற்றிக்கொண்டது. விமானம் உடனே தரை இறக்கப்படாதிருந்தால் அழிவுகள் அதிகமாக இருந்திருக்கும்.
American Airlines விமான சேவைக்கு சொந்தமான Boeing 737-800 வகை விமானமே 172 பயணிகளுடனும், 6 பணியாளருடனும் பயணிக்கையில் இயந்திர கோளாறுக்கு உள்ளானது. கோளாறின் காரணம் இதுவரை அறியப்படவில்லை.
பயணிகளை Dallas எடுத்து செல்ல மாற்று விமானம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
மூன்று கிழமைகளுக்கு முன் Delta விமானம் ஒன்று Toronto நகரில் தரை இறங்கும்போது விபத்துக்கு உள்ளாகி தலைகீழ் ஆனது. அதிலும் எவரும் பலியாகவில்லை.
வெள்ளை மாளிகைக்கு அருகே American Airlines பயணிகள் விமானமும், இராணுவ ஹெலியும் மோதியதால் 67 பேர் பலியாகி இருந்தனர்.
டிசம்பர் மாதம் தென் கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்துக்கும், Kazakhatan விமான விபத்துக்கும் 200 பேருக்கும் மேலானோர் பலியாகி இருந்தனர்.