கனடா மீதான 50% வரியை பின்வாங்கினார் ரம்ப்

கனடா மீதான 50% வரியை பின்வாங்கினார் ரம்ப்

கனடாவின் Ontario மாநில முதல்வர் (Premier) Doug Ford தனது மாநிலத்தில் இருந்து அமெரிக்காவுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கு 25% மேலதிக ஏற்றுமதி வரி அறவிட அறிவித்ததால் பயம் கொண்ட ரம்ப் கனடாவின் இரும்பு, அலுமினியம் ஆகியவற்றுக்கு அறிவித்த 50% மேலதிக இறக்குமதி வரியை இடைநிறுத்தி உள்ளார். அதனால் Ford தனது மின்சார வரியையும் இடைநிறுத்தி உள்ளார். ஆனாலும் ரம்பின் இரும்பு, அலுமினியம் மீதான 25% வரி நடைமுறையில் இருக்கும்.

அதாவது செவ்வாய் ரம்ப் அறிவித்த 50% புதிய இறக்குமதி வரி புதன் பின்வாங்கப்பட்டது.

அத்துடன் அமெரிக்க வர்த்தக செயலாளர் Howard Lutnick, கனடிய நிதியமைச்சர் Dominic LeBlanc, மாநில முதல்வர் Doug Ford ஆகியோர் வியாழன் கூடி வரிகள் தொடர்பாக உரையாடவுள்ளனர்.

வியாழன் பேச்சுக்கள் நலமாக அமையாவிட்டால் மேற்படி வரிகள் மீண்டும் நடைமுறை செய்யப்படலாம்.

இவர்கள் NAFTA வர்த்தக உடன்படிக்கையை மாற்றி அமைக்க முனையக்கூடும். அதில் ஒரு சிறு மாற்றம் ஏற்படுத்தினாலும் அதை தனது பெரு வெற்றியாக பறைசாற்ற ரம்புக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

ரம்பின் வரி குழப்பங்களால் திங்கள் வீழ்ச்சி அடைந்த அமெரிக்க பங்கு சந்தைகள் மீண்டும் செவ்வாயும் பெரு வீழ்ச்சியை அடைந்துள்ளன.