அமெரிக்கா பொருளாதார மந்த நிலை பயத்தில் 

அமெரிக்கா பொருளாதார மந்த நிலை பயத்தில் 

சனாதிபதி ரம்ப் செய்யும் அரசியல், பொருளாதார தாண்டவம் காரணமாக அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை (recession) ஏற்படலாம் என்ற பயம் வலுவடைந்து வருகிறது. இந்த பயம் காரணமாக அமெரிக்காவின் பங்குச்சந்தை நேற்று திங்களும் பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ளது.

ரம்பும் மறைமுகமாக பொருளாதார மந்த நிலை ஏற்படலாம் என்று கூறியுள்ளார். அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்கள் அவர் பொது இடங்களில் தோன்றாது மறைந்துள்ளார்.

குறிப்பாக அமெரிக்கா-கனடா-மெக்சிக்கோ ஆகிய 3 நாடுகளுக்கும் இடையில் நடைமுறையில் உள்ள NAFTA என்ற வர்த்தக உடன்படிக்கைக்கு எதிராக ரம்ப் புதிய இறக்குமதி வரிகளை நடைமுறை செய்ததும், கனடா பதிலடி வரிகளை நடைமுறை செய்ததும் கார் உற்பத்தி துறை போன்ற பெரும் வர்த்தகங்களை குழப்பி உள்ளது. அவை பொருளாதார மந்த நிலைக்கு காரணமாக அமையலாம்.

திங்கள் அமெரிக்காவின் பெரிய நிறுவனங்களை கணிப்பில் கொள்ளும் S&P 500 என்ற பங்ச்சந்தை சுட்டி 2.7% வீழ்ச்சியை அடைந்துள்ளது. DOW என்ற சுட்டி 2% வீழ்ச்சியை அடைந்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களை கணிப்பில் கொள்ளும் NASDAQ 4% வீழ்ச்சியை அடைந்துள்ளது.

அதவேளை இலான் மஸ்கின் Tesla கார் நிறுவன பங்கு ஒன்றில் விலை திங்கள் மேலும் 15.4% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது.

திங்கள் அமெரிக்க பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து செவ்வாய் ஆசிய பங்குச்சந்தைகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன.