சிரியாவில் புதிய அரச படைகளுக்கும் முன்னாள் சனாதிபதி அசாத் ஆதரவு ஆயுத குழுக்களுக்கும் இடையில் கடந்த இரண்டு தினங்களாக இடம்பெறும் மோதல்களுக்கு இதுவரை சுமார் 1,000 பேர் பலியாகி உள்ளனர்.
பலியானோரில் 745 பேர் பொதுமக்கள் என்றும், 125 பேர் அரச படையினர் என்றும், 148 பேர் அசாத் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது. பலியான Alawite இன பொதுமக்களில் பலர் அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறைகள் Latakia மாநிலத்தில் இடம்பெறுகின்றன. இந்த கடலோர மாநிலத்தில் அதிகமாக முன்னாள் சனாதிபதி அசாத் ஆதரவு Alawite இன மக்கள் வாழ்கின்றனர்.
2011ம் ஆண்டுக்கு பின் சிரியாவில் இவ்வளவு தொகையானோர் பலியாகியது இம்முறையே.